Showing posts with label varaha sarmaslokam. Show all posts
Showing posts with label varaha sarmaslokam. Show all posts

Monday

bhagavan vishayam

                                         வராஹ  சர்மஸ்லோகம்

ஸ்திதே மநஸி ஷூஸ்வஸ்தே சரீரே ஸதி யோநர:
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபபஞ்ச மாமஜம் |
ததஸ்து ம்ரியமாணம் து காஷ்ட பாஷாந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||

மனசெல்லாம் நல்ல முறையிலே இருக்கிறபோதே - மனஸ் அலைபாயக்கூடாது - உடம்பிலே பலம், புஷ்டி, தேஜஸ், இதெல்லாம் இருக்கிறபோதே , புத்தி சலிக்காமல்  இருக்கிறபோதே, நரம்புகள் முறுக்கேறி மிடுக்குடன் இருக்கிறபோதே, லோகத்தயே உடம்பாக கொண்டு ஆதியும் அந்தமும்(அழிவேயில்லாத) இல்லாத என்னை த்யானம் பண்ணுகிறானோ, பிற்காலத்தில் கட்டையோடும் ஒத்தவனாய், தன்நினைவேயில்லாமல் இருந்தாலும் மரணமடையும் தருவாயிலிருக்கும் அந்த என் பக்தனை, நானே நேரடியாக உயர்ந்த பதிவியான மோக்ஷத்துக்கு அழைத்து செல்கிறேன். அவன் என்னால் உடனே ரக்ஷிக்கபடுகிறான். அவன் எனக்கு மிகவும் பிரியமானவன்.

 -This was told by lord varaha(Sriman Narayanan) to Goddess Bhumi devi( Bhoo Devi).

Saturday

Narasimhar Vishayam



ஆடி ஆடி அகம் கரைந்து, இசை பாடி பாடி கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று வாடி வாடி இவ்வாணுதலே சுவாமி  நம்மாழ்வார் 
                                                                                                    -    திருவாய்மொழி  - 2.4.1



                                       

Friday

Prabathi


மாதா நரசிம்ஹா, பிதா நரசிம்ஹா
ப்(4)ராதா நரசிம்ஹா ஸகா நரசிம்ஹா
வித்(3)யா நரசிம்ஹா, த்(3)ரவிணம் நரசிம்ஹா
ஸ்வாமி நரசிம்ஹா ஸகலம் நரசிம்ஹா
இதோ நரசிம்ஹா பரதோ நரசிம்ஹா
யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹா
நரசிம்ஹா தே(3)வாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹா சரணம் ப்ரபத்(3)யே

Monday

Vishnu Sahasranamam

                        விஷ்ணு சஹஸ்ரநாமம்  

தத்வத்தைப் ( உண்மைப்பொருளைப் ) பற்றிய வினா?

வினா :1 கிமேகம் தைவதம் லோகே? ( யார் முழுமுதற்கடவுள்? ) 

விடை:  தைவதம் தேவதாநாம்ச.......புனர்வ யுகக்ஷயே. ( யவன் தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமோ, ஜீவராசிகலுக்கெல்லாம்  தந்தையோ, யவனிடம் பிரபஞ்சம் உருவாகுமோ, யவனிடம் லயிக்குமோ அந்த ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற்கடவுள். ). 


புருஷார்த்தத்தை ( அடையவேண்டிய பயனைப்  ) பற்றிய வினா?

வினா :2  கிம் வாப்யேகம் பராயணம்? (எது இறுதியான பயன் - அடையதகுந்த  புருஷார்த்தத்ம் ? )
விடை: பரமம் யோ மஹத் தேஜ:.. மண்களாநாம்  ச மங்களம் (யவன் ஒப்புயர்வற்ற ஒளியோ, எவன் அனைத்தையும் ஆணையிடுபவனோ, எவன் எங்கும் உள்ள பெரியவனோ, எவன் அடையத்தகுந்த பலமோ, குற்றமற்றவனோ, அடியார்களை தூய்மையாக்குபவனோ, இனிய பொருட்களில் இனிமையானவனோ, அந்த விஷ்ணுவே அடையதகுந்த இறுதியான பலன் ).


ஹிதத்தை (அடைவிக்கும் வழியைப் ) பற்றிய வினாக்கள் 
வினா: 3  ஸ்துவந்த: கம் (யாரை வாயால் ஸ்தோத்ரம் செய்ய வேண்டும் ?)

விடை: 3 அநாதி நிதனம்  விஷ்ணும் ஸர்வலோக மகேஸ்வரம் லோகாத்யக்ஷம்   ஸ்துவந் நித்யம் சர்வதுக்காதிகோபவேத் ......... ஷர்வபூதபவோத்பவம் ( ஆதி அந்தம் அற்று எல்லாக் காலங்களிலும் இருப்பவனாய், என்குமுள்ளவனாய், மேலான ஸ்வாமியான ஆதி காரணனான, எங்குமுள்ள விஷ்ணுவை துதிப்பவன் (ஸ்தோத்ரம் செய்பவன்) துன்பங்களை கடந்தவன் ஆகிறான் ).


வினா : 4  கம் அர்சந்த: ( யாரிடம் பக்தி செய்து ) ப்ரப்நுயர் மாநவா: சுபம் (மனிதர்கள் சுபத்தை அடைகிறார்கள்? )


விடை: தமேவ சார்ச்சயந்   நித்யம் பக்த்யா புருஷமவ்யயம் த்யாயந் ஸ்துவந் நமஸ்யம்ஸ்ச யஜமானஸ்தமேவச ( ஷுர்யமண்டலத்துக்கு நடுவே இருப்பவனான வடிவழகிய  தாமறைக்கண்ணனை மனத்தால் இடையறாமல் சிந்தித்து, வாயினால் பாடி, உடலால் வணங்கி தொண்டு செய்வதாகிய பக்தி யோகத்தால் மனிதன் இவ்வுலக, பரலோக இன்பத்தை அடைகிறான்) .


வினா 5 கோதர்ம சர்வ தர்மாணாம் பவத பரமோ  மத :(நீரறிந்த தர்மங்களிலே சிறந்தது எது? )

விடை: ஏஷமே சர்வ தர்மாணாம் தர்மோதிகமதோ மத: |
                யத் பக்த்யா புன்டரீகாஷம் ஸ்தவை: அர்சேந் நர: சதா ||
 ( நானறிந்த தர்மங்களிலே மிக சிறந்தது - கமலக்கண்ணனை அன்போடு துதித்து மலர்களை தூவி அர்ச்சனை செய்வதே ).

வினா: 6  கிம் ஜபன்  முச்யதே ஜந்து: ஜன்ம சம்சார பந்தநாத் ( எதை ஜபித்து மனிதன் சம்சார சுழலிலிருந்து விடுபடுகிறான் ?)
விடை:   ஜகத பிரபும தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம் |
                  ஸ்துவந் நாம சஹஸ்ரேண புருஷஸ்  ஸததோத்தித: ||

( உலகுக்கே தலைவனான எல்லையற்றவனாய், வேண்டிய வரத்தை கொடுக்கும் வள்ளலான ஸ்ரீமன நாராயணனின் ஆயிரம் திருநாமங்கள் விடாமல் ஜபித்து மனிதன் துன்பச் சுழலை கடக்கிறான்) .

                                          ஹரே நாராயணா |