Monday

Vishnu Sahasranamam

                        விஷ்ணு சஹஸ்ரநாமம்  

தத்வத்தைப் ( உண்மைப்பொருளைப் ) பற்றிய வினா?

வினா :1 கிமேகம் தைவதம் லோகே? ( யார் முழுமுதற்கடவுள்? ) 

விடை:  தைவதம் தேவதாநாம்ச.......புனர்வ யுகக்ஷயே. ( யவன் தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமோ, ஜீவராசிகலுக்கெல்லாம்  தந்தையோ, யவனிடம் பிரபஞ்சம் உருவாகுமோ, யவனிடம் லயிக்குமோ அந்த ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற்கடவுள். ). 


புருஷார்த்தத்தை ( அடையவேண்டிய பயனைப்  ) பற்றிய வினா?

வினா :2  கிம் வாப்யேகம் பராயணம்? (எது இறுதியான பயன் - அடையதகுந்த  புருஷார்த்தத்ம் ? )
விடை: பரமம் யோ மஹத் தேஜ:.. மண்களாநாம்  ச மங்களம் (யவன் ஒப்புயர்வற்ற ஒளியோ, எவன் அனைத்தையும் ஆணையிடுபவனோ, எவன் எங்கும் உள்ள பெரியவனோ, எவன் அடையத்தகுந்த பலமோ, குற்றமற்றவனோ, அடியார்களை தூய்மையாக்குபவனோ, இனிய பொருட்களில் இனிமையானவனோ, அந்த விஷ்ணுவே அடையதகுந்த இறுதியான பலன் ).


ஹிதத்தை (அடைவிக்கும் வழியைப் ) பற்றிய வினாக்கள் 
வினா: 3  ஸ்துவந்த: கம் (யாரை வாயால் ஸ்தோத்ரம் செய்ய வேண்டும் ?)

விடை: 3 அநாதி நிதனம்  விஷ்ணும் ஸர்வலோக மகேஸ்வரம் லோகாத்யக்ஷம்   ஸ்துவந் நித்யம் சர்வதுக்காதிகோபவேத் ......... ஷர்வபூதபவோத்பவம் ( ஆதி அந்தம் அற்று எல்லாக் காலங்களிலும் இருப்பவனாய், என்குமுள்ளவனாய், மேலான ஸ்வாமியான ஆதி காரணனான, எங்குமுள்ள விஷ்ணுவை துதிப்பவன் (ஸ்தோத்ரம் செய்பவன்) துன்பங்களை கடந்தவன் ஆகிறான் ).


வினா : 4  கம் அர்சந்த: ( யாரிடம் பக்தி செய்து ) ப்ரப்நுயர் மாநவா: சுபம் (மனிதர்கள் சுபத்தை அடைகிறார்கள்? )


விடை: தமேவ சார்ச்சயந்   நித்யம் பக்த்யா புருஷமவ்யயம் த்யாயந் ஸ்துவந் நமஸ்யம்ஸ்ச யஜமானஸ்தமேவச ( ஷுர்யமண்டலத்துக்கு நடுவே இருப்பவனான வடிவழகிய  தாமறைக்கண்ணனை மனத்தால் இடையறாமல் சிந்தித்து, வாயினால் பாடி, உடலால் வணங்கி தொண்டு செய்வதாகிய பக்தி யோகத்தால் மனிதன் இவ்வுலக, பரலோக இன்பத்தை அடைகிறான்) .


வினா 5 கோதர்ம சர்வ தர்மாணாம் பவத பரமோ  மத :(நீரறிந்த தர்மங்களிலே சிறந்தது எது? )

விடை: ஏஷமே சர்வ தர்மாணாம் தர்மோதிகமதோ மத: |
                யத் பக்த்யா புன்டரீகாஷம் ஸ்தவை: அர்சேந் நர: சதா ||
 ( நானறிந்த தர்மங்களிலே மிக சிறந்தது - கமலக்கண்ணனை அன்போடு துதித்து மலர்களை தூவி அர்ச்சனை செய்வதே ).

வினா: 6  கிம் ஜபன்  முச்யதே ஜந்து: ஜன்ம சம்சார பந்தநாத் ( எதை ஜபித்து மனிதன் சம்சார சுழலிலிருந்து விடுபடுகிறான் ?)
விடை:   ஜகத பிரபும தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம் |
                  ஸ்துவந் நாம சஹஸ்ரேண புருஷஸ்  ஸததோத்தித: ||

( உலகுக்கே தலைவனான எல்லையற்றவனாய், வேண்டிய வரத்தை கொடுக்கும் வள்ளலான ஸ்ரீமன நாராயணனின் ஆயிரம் திருநாமங்கள் விடாமல் ஜபித்து மனிதன் துன்பச் சுழலை கடக்கிறான்) .

                                          ஹரே நாராயணா |

 




                













   





No comments:

Post a Comment